×

கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பங்கேற்பு

 

திண்டுக்கல், செப்.15: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழநி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். செயற்குழு கூட்டத்தில், வருகின்ற 17ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திலிருந்து திர ளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜன், மார்க்ரேட் மேரி, பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஒன்றிய தலைவர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், பகுதி கழகச் செயலாளர்கள் ஜானகிராமன், பஜ்லு ஹக், மீடியா சரவணன், விவசாய அணி இலகண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், கலை ராஜா, இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் உட்பட நகர, ஒன்றிய, பேரூர், அனைத்து மாவட்ட சார்புஅணி, துணை அமைப்பாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : East District DMK Working ,Committee ,I.P.Senthilkumar ,Dindigul ,East District DMK ,Working ,Artist House ,East District… ,East District DMK Executive Committee ,IP Senthilkumar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு...