×

6 முதல் 12ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு இன்று தொடக்கம் விதிமுறைகளை வெளியிட்டு சிஇஓ உத்தரவு

நாகர்கோவில், செப்.15: 6 முதல் 12ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறையால் செப்டம்பர் 7ம் தேதி அன்று வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையில் உள்ள தேதி மற்றும் நேரம் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். வினாத்தாள்களை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்றும் காலை 8.30 மணிக்கு தங்கள் பள்ளிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் குறித்த நேரத்தில் பொறுப்பான ஆசிரியர் வழி பெற்றுக்கொள்ள வேண்டும். வினாத்தாள் உறைகளை தேர்வு நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர்தான் திறக்க வேண்டும். வினாத்தாள் உறைகளை திறக்கும்போது பொறுப்பாசிரியர் ஒருவரை அருகே வைத்துக்கொள்ள வேண்டும். வினாத்தாள்களை நகல் எடுக்க கூடாது.

வினாத்தாள் குறைவாக காணப்பட்டால் உடனடியாக தங்கள் பள்ளிக்கான வினாத்தாள் மையத்தையோ அல்லது வினாத்தாள் ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொண்டு போதுமான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள வேண்டும். விடைத்தாள் ரகசியமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு எழுத ஒதுக்கப்பட்டுள்ள நேரம் முழுமையாக வழங்க வேண்டும். செப்டம்பர் 26ம் தேதி அன்று அனைத்து மாணவர்களுக்கும், அதற்கு அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை தேர்வு செய்ய ஏதுவாக ஸ்டடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு நாட்களில் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்.

தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களுக்கு அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை பயிற்சி வழங்க வேண்டும். இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றி முதல் பருவ காலாண்டு தேர்வை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் நடத்தி முடித்திட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதில் முறைகேடுகள் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், நிர்வாகம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 6 முதல் 12ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு இன்று தொடக்கம் விதிமுறைகளை வெளியிட்டு சிஇஓ உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி