×

ராயபுரம் உருது பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் உணவுக்கூட பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ராயபுரம் அரத்தூண் சாலையில் மாநகராட்சி உருதுப் பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதனை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கான கூடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று காலை உருதுப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதே பள்ளி வளாகத்தில் மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் படித்து வருகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள் காத்திருப்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. அதனையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

The post ராயபுரம் உருது பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் உணவுக்கூட பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Rayapuram Urdu School ,MLA ,Thandaiyarpet ,Municipal Urdu School ,Arathoon Road, Rayapuram ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு