×

30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு வெற்றிகர சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: பக்ரைன் நாட்டைச் சேர்ந்த காலித் (36) என்பவருக்கு, 6 வயதிலிருந்தே வலிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. வலது கையில் தொடங்கும் வலிப்பின் தாக்கம் படிப்படியாக தீவிரமடைந்து, உடல் முழுவதும் பரவி, சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்திருக்கும். ஒரு நாளில், 3 முதல் 10 முறை வரை ஏற்படும் இந்த வலிப்பு தாக்கத்தால், அவரது தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்று வெவ்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் காலப்போக்கில் இப்பாதிப்பு மேலும் மோசமானது. அவரது உடல்சார்ந்த திறன்கள் மட்டுமின்றி, அறிவு மற்றும் மனவளர்ச்சியையும் இது பாதித்தது. மேலும், பலமுறை கீழே விழுந்து எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால் அதற்கான அறுவை சிகிச்சைகளும் இவருக்கு அவசியமானதாக இருந்தன.

இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான பிரிவு இயக்குனர் மற்றும் நரம்பியல் பிரிவு குழும வழிகாட்டுனர் கிரிஷ் ஸ்ரீதர் மற்றும் நரம்பியல் நிபுணரான டாக்டர் அருள்மொழி ஆகியோர் கண்காணிப்பில் எம்ஆர்ஐ மற்றும் பெட் சிடி ஸ்கேன்கள், வீடியோ இஇஜி சோதனை உட்பட விரிவான நோயறிதல் பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடந்து இஇஜி கட்டுப்பாடு மற்றும் இமேஜிங் அடிப்படையில், அந்த வாலிபருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இது தொடர்பாக டாக்டர் தர் கூறியதாவது: கால், கை வலிப்பு அல்லது வலிப்பு அறிகுறிகள் பாதிப்பிற்கு பல்வேறு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்ற போதிலும், கட்டுப்படாத நிலையில், உயர்திறன் மிக்க மூளை நரம்பியல் சிகிச்சை மையத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது முக்கியமானது. இத்தகைய கட்டுப்பாடற்ற வலிப்பு தாக்கத்தை கையாள்வதற்கு நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் சார்ந்த தீவிர சிகிச்சைப்பிரிவு வல்லுனர்கள் ஆகியோர் அடங்கிய பல்துறை மருத்துவர்கள் குழுவுடன் மறுவாழ்வு சிகிச்சை மற்றும் நரம்பியல் சார்ந்த மின்னியங்கியல் நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். சிகிச்சையளிக்க சிரமமாக இருக்கும் நிலையிலோ அல்லது கட்டுப்படுத்த இயலாத வலிப்பாக இருக்கும் தருணத்திலோ அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்பட வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, முற்றிலுமாக முடக்கிப் போட்டிருந்த வலிப்புநோய் பாதிப்பிலிருந்து காலித் மீண்டு வருவதற்கு உதவியிருப்பது குறித்து மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான குழு மகிழ்ச்சியடைந்துள்ளது, என்றார்.

The post 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு வெற்றிகர சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Chennai ,Khalid ,Bakhrain ,Dinakaran ,
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்