×

வக்ப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல்: அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு: வக்ப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ளது. தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் தேர்தல் அலுவலர் அல்லது தமிழ்நாடு வக்ப் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் அல்லது வக்ப் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மண்டல வக்ப் கண்காணிப்பாளர்களிடம் தங்களின் அடையாளத்திற்கான சான்று பெற்று வருகிற 25ம் தேதி மாலை 5 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தேர்தல் அலுவலரிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

The post வக்ப் வாரிய முத்தவல்லி பிரிவு உறுப்பினர்களுக்கான தேர்தல்: அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Wakp Board Muthawalli Division ,Chennai ,Tamil Nadu ,Excellent ,Serimarabiner Welfare Department ,Election ,Wakp Board Muthavalli Division ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...