×

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை செல்வார்கள்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதில் மனு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இலங்கை குடிமகனான முருகன் தற்போது திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசின் அயல்நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விதிகளின்படி, தமிழக சிறையில் இருந்து விடுதலையாகும் வெளிநாட்டினர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர். ஆனால் இந்த வழக்கில் யாரும் ஆவணத்துடன் வரவில்லை. கள்ளத்தோணி மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதகரத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் இவர்கள்4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

The post ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை செல்வார்கள்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Freed Murugan ,Sri Lanka ,Government ,iCort. ,Chennai ,Former ,Rajiv Gandhi ,Jailed Nalini ,Murugan Litore ,Union Government ,Icourt ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...