×

மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று ஒருநாள் மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro Rail Service ,Chennai ,Vineyagar Chadurdhi ,Metro ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...