×

தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: ‘‘தமிழ்நாட்டில், கடந்த ஒருவாரத்தில் 113 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், உடைந்து போன மண், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் தெருவில் வீசப்படும் டயர்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகிறது. இந்த கொசுவால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. எனவே கொசு உற்பத்தியை தடுக்க அரசு, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் டெங்கு பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர உள்ளாட்சி அமைப்புகள் மிக தீவிரமாக ஈடுபட்டு, கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் 113 பேர் டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 535 பேர் பாதிக்கபட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu People's Welfare Department ,Dengue ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...