
- சென்னை மண்டல கள ஆய்வு கூட்டம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம்
- எம். ஸ்டாலின்.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துறையில்
- எம். ஸ்டால்
சென்னை: சென்னை மண்டல கள ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21, 22ம் தேதிகளில் நடக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள், அரசு திட்டங்களின் நிலைகள் குறித்து மண்டல அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை தென்மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் பகுதிகளில் அவர் கள ஆய்வு கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே தமிழக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய வளர்ச்சி திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றின் இரண்டரை ஆண்டுகால முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென அனைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வு கூட்டம் செங்கல்பட்டு அல்லது சென்னையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வரும் 21, 22ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல களஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.