×

இந்து முன்னணி பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது

மாதவரம்: புளியந்தோப்பு தட்டாங்குளம் ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் ஆர்டி பிரபு (43). இவர், பாரத் இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் அருகே விநாயகர் சிலை வைப்பதற்கான பணிகளை பார்வையிட்ட பிரபு அங்காளம்மன் கோயில் தெரு வழியாக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடி ஜங்கிலி கணேசன், கத்தியைக் காட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், நேற்று சூளை டி.கே முதலி தெருவைச் சேர்ந்த கணேசன் (எ) ஜங்கிலி கணேசன் (38) என்பவரை கைது செய்தனர். அவர், போதையில் தனது கள்ளக்காதலி வீட்டில் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டிவிட்டு, அந்த ரத்தக் கறையுடன் வந்து பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஜங்கிலி கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜங்கிலி கணேசன் மீது 35 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்து முன்னணி பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Madhavaram ,RD Prabhu ,Achari Street ,Pulianthoppu Thattangulam ,Bharat Hindu Front ,Hindu ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை: போலீசார் விசாரணை