×

திருத்தணி அருகே பரபரப்பு ஊராட்சி செயலாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

திருத்தணி: திருத்தணி அருகே ஊராட்சி செயலாளர் மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி அடுத்த திருவலாங்காடு அருகே உள்ளது நார்த்தவடா கிராமம். இங்கு வசிப்பவர் கோட்ட முனுசாமி மகன் ஜெயசீலன்(50). இவர் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வியாசபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு வீட்டில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார். மேலும், நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு வரவில்லை இதனைத் தொடர்ந்து அவருடைய சகோதரி மற்றும் உறவினர்கள் அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டனர்.

இதில், செல்போன் எண் நீண்ட நேரமாக ரிங்டோன் மட்டுமே சென்று கொண்டிருந்தது. இதில், போன் யாரும் எடுக்காத காரணத்தால் அனைவரும் தோட்ட பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள மரத்தடியில் ஜெயசீலன் இறந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, அவர் அருகில் மது பாட்டிகள் இருந்தது. இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் அவருடைய உடலை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

இது குறித்து திருவலங்காடு போலீசாருக்கு தகவல் சென்றது, அதன் பேரில் போலீசார் ஜெயசீலன் வீட்டிற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்ற சென்றனர். அப்போது அவருடைய உறவினர்களும் பொதுமக்களும் உடலை எடுக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர் குடும்பத்தினரிடம் மற்றும் உறவினர்களிடம் சமரசம் செய்தனர். பின்னர், இறந்தவரின் உடலை திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன ஜெயசீலன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இயற்கை மரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணி அருகே பரபரப்பு ஊராட்சி செயலாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Stirhatani ,Tiruthani ,Padu ,Thiruthani ,Stir Padrutani ,
× RELATED திருத்தணியில் கிணற்றில் தத்தளித்த...