×

பள்ளி கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு உதவிபெறும் சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம் நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினார். இதில் இடைநிலை ஆசிரியர் இமானுவேல், தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்து, மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post பள்ளி கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,CSI School for Mental Health Victims ,Sivakasi, Virudhunagar District ,
× RELATED சிவகாசி குழந்தை திருச்சியில் விற்பனை: தாய், தந்தை உட்பட 6 பேர் மீது வழக்கு