திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு குப்புசாமிபுரம் 2-வது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது பழங்காலத்து முதுமக்கள் தாழி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு முதுமக்கள் தாழி பத்திரமாக எடுக்கும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் பத்திரப்படுத்தப்பட்டுதொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
The post குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மனித எலும்புகளுடன் முதுமக்கள் தாழி appeared first on Dinakaran.