×

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற ஒதுக்கிய நிதியில் முறைகேடு: மருத்துவக்கல்வி இயக்குநரக குழு விசாரணை

ஆண்டிபட்டி: தேனி அருகே கண்டமனூர் விலக்கில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெறும் பணிக்காக, சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் உயிர்காக்கும் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், புதிய சாலை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய மீனாட்சி சுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமை பேராசிரியராக இருந்த திருநாவுக்கரசு முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

இதனிடையே, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் நடந்த பணிகள் குறித்த வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டபோது, பல்வேறு முறைகேடு தெரிய வந்துள்ளது. குறிப்பாக தேசிய தரச்சான்று பெற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பொய்யான கணக்குகள் காட்டப்பட்டதாகவும், 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற ஒதுக்கிய நிதியில் முறைகேடு: மருத்துவக்கல்வி இயக்குநரக குழு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Theni Government Medical College Hospital ,Directorate of Medical Education Committee ,Andipatti ,Government Medical College Hospital ,Kandamanur ,Theni ,
× RELATED ஆண்டிபட்டி வாலிபருக்கு சீனப்பெண்ணுடன் டும்..டும்..