×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 18ம் தேதி தொடக்கம்: கருடசேவையன்று பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடு

திருமலை: திருப்பதியில் வரும் 18ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செயல் அதிகாரி தர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயல் அதிகாரி தர்மா நேற்று ஆய்வு செய்தார். இதில் சுவாமி வீதி உலா வரக்கூடிய நான்கு மாட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் செயல் அதிகாரி தர்மா கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடந்திர பிரமோற்சவம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கருட சேவையன்று பக்தர்களை அருகில் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நான்கு மாட வீதி சுற்றி அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நான்கு மாட வீதி சுற்றி கேலரிகள் நிரம்பியதும் உட்புற மற்றும் வெளிப்புற காரிடரில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்து வைப்பதற்காக சுபதம் நுழைவாயில் வழியாகவும், தென்மேற்கு நுழைவு, கோவர்தன் சத்திரம், வடமேற்கு நுழைவு, வடக்கு கிழக்கு நுழைவு ஆகிய இடங்களில் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு மாட வீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்கள் அந்த வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், இரவு 7 மணிக்கு அன்று கருட சேவையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக சுவாமி வீதி உலா நடைபெறும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 18ம் தேதி தொடக்கம்: கருடசேவையன்று பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Etemalayan ,Karudasava ,Thirumalai ,Tirupati ,Karudasewa ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...