
- மோடி
- அமித் ஷா
- பாஜக-ம.ஜ.த
- எடியூரப்பா
- பெங்களூரு
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- உள்துறை அமைச்சர்
- பிஜேபி-MJD கூட்டணி
- தின மலர்
பெங்களூரு: பாஜ-மஜத கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முடிவெடுப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக தேசியளவில் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் விதமாக, மக்களவை தேர்தலுக்கு பாஜ – மஜத கூட்டணி அமைக்கிறது. பாஜ – மஜத கூட்டணி உறுதி என்றும், கர்நாடகாவின் 28 மக்களவை தொகுதிகளில் 4ல் மஜத போட்டியிட அமித்ஷா ஒப்புக்கொண்டதாகவும், 25 தொகுதிகளில் பாஜ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கடந்த 8ம் தேதி முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடந்த பாஜ மத்திய தேர்தல் கமி ட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட பின் பெங்களூருவிற்கு திரும்பிய எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஜி20 மாநாடு வெற்றி மற்றும் மத்திய பிரதேச தேர்தல் வெற்றி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கூட்டணி பற்றி அவர்கள் இருவரும் முடிவு செய்வார்கள்’ என்று தெரிவித்தார்.
The post பாஜ-மஜத கூட்டணி குறித்து மோடி, அமித்ஷா முடிவெடுப்பார்கள்: எடியூரப்பா தகவல் appeared first on Dinakaran.