×

விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ரன்வேயில் சறுக்கி நொறுங்கிய குட்டி விமானம்: பயணிகள் காயத்துடன் தப்பினர்

மும்பை: போபாலைச் சேர்ந்த திலிப் பில்ட்கான் என்ற உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் லியர்ஜெட் 45 என்ற சிறிய ரக விமானம். இந்த விமானம் விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி விமானம் நிலையம் நோக்கி வந்தது. அதில் துருவ் கோடக், லார்ஸ் சோரென்சென், கே.கே.கிருஷ்ணதாஸ், ஆகார்ஷ் சேத்தி, அருள் சாலி, காமாக்‌ஷி ஆகிய 6 பயணிகள், சுனில், நெயில் ஆகிய 2 விமானிகள் உட்பட 8 பேர் பயணித்தனர்.

இவர்களில் லார்ஸ் சோரென்சென் டென்மார்க்கைச் சேர்ந்தவர் மற்ற அனைவரும் இந்தியர்கள். நேற்று மாலை 5 மணியளவில் மும்பை விமான நிலையத்தின் 27வது ஓடுதளத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது கனமழை பெய்ததால் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி விலகிச் சென்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 8 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் பிற விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை.

The post விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ரன்வேயில் சறுக்கி நொறுங்கிய குட்டி விமானம்: பயணிகள் காயத்துடன் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,VSR Ventures Learjet 45 ,Bhopal ,Dilip Buildcon ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!