×

இறந்த தந்தையின் சொத்தில் விவாகரத்து பெற்ற மகளுக்கு உரிமை இல்லை: திருமணமான, விதவை மகள் உரிமை கோரலாம்: டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த பெண்ணின் தந்தை 1999ம் ஆண்டில் இறந்தார். அவரது சொத்துக்கு நான்கு வாரிசுகள். அவரது மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள். ஆனால் விவகாரத்து பெற்ற ஒரு மகளுக்கு சட்டப்பூர்வ வாரிசாக எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை என்று அவர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,’ தந்தை சொத்தில் எனக்குப் பங்கு கொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில், எனது தாயும், சகோதரனும் எனக்குப் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ. 45,000 கொடுக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் 2014ம் ஆண்டு நவம்பர் வரை மட்டுமே எனக்கு முறையாக பராமரிப்பு நிதி வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தி விட்டார்கள்.

2001ம் ஆண்டு செப்டம்பரில் எனது கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டதால், எனக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அப்போது எனது கணவரிடமிருந்து பணம், ஜீவனாம்சம் அல்லது பராமரிப்பு எதுவும் பெறவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து, விவாகரத்து பெற்ற பெண் அவரது சகோதரர் தாயிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் எழுப்ப முடியாது’ என்று தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் விசாரித்தனர். அப்போது,’இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் பராமரிப்பு உரிமை கோரப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு உரிமை ஒன்பது வகை உறவினர்களுக்கு வழங்குகிறது. அதில் விவாகரத்து பெற்ற மகள் பட்டியல் இல்லை. திருமணமாகாத அல்லது விதவை மகள் இறந்தவரின் சொத்தில் உரிமை கோருவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாகரத்து பெற்ற மகள் இதில் இடம் பெற மாட்டார்’ என்று கூறி பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post இறந்த தந்தையின் சொத்தில் விவாகரத்து பெற்ற மகளுக்கு உரிமை இல்லை: திருமணமான, விதவை மகள் உரிமை கோரலாம்: டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...