×

நியூயார்க்கில் 26ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ள குவாட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி7 மற்றும் சீன உச்சி மாநாட்டில் பங்கேற்க வார இறுதியில் கியூபா பயணிக்க இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் வருகிற 18ம் தேதி சிறப்பு அமர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் சிறப்பு அமர்வு முடிந்ததும் நியூயார்க்கில் வருகிற 26ம் தேதி நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் குவாட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். நியூயார்க்கில் அந்த கூட்டங்கள் நடைபெற இருப்பதால் அதற்கான இறுதி தேதியை முடிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பிரிக்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பது தீவிரவாதம் குறித்து மற்ற நாடுகளுடன் இந்தியா விவாதிப்பதற்கு ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. குவாட் கூட்டமைப்பில் மாஸ்கோவிடம் நீண்ட கால தொடர்பில் இருந்து வரும் காரணத்தால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு இந்தியா வெளிப்படையான கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நியூயார்க்கில் 26ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ministers ,New York ,Minister ,Jaishankar ,New Delhi ,Foreign Minister ,Quad, Shanghai Cooperation Organization ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்