×

கோவை குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாளின்போது சிறை கைதிகளை விடுவிக்கும்போது கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவரை உயர் நீதிமன்றம் கண்டித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை முன் கூட்டிய விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 11ம் தேதி பிறப்பித்தது.

இந்த நிலையில், அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடிவிக்கும்போது கோவை குண்டுவெடிப்பு சம்பவ தண்டனை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரி கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் கோவிந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ஒய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையிலான குழு வகுத்த விதிகளின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் மட்டுமே அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறி அரசாணையை தாக்கல் செய்தார். அப்போது, நீதிபதிகள் மனுதாரரின் வழக்கறிஞரிடம் கடந்த 7ம் தேதி அரசுக்கு மனு அனுப்பிவிட்டு எந்த ஆவணங்களும் இல்லாமல் சாதாரணமாக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். பொதுநல வழக்கு உரிமையை தவறாக பயன்படுத்த வேண்டாம். குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விபரங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் பதில் இல்லாததால் வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கோவை குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Coimbatore ,Chennai ,Anna ,
× RELATED அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி...