×

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை: ஒரே ஆண்டில் 23 பேர் இறப்பு

கோடா: கோடாவில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு நடப்பு ஆண்டில் மட்டும் 23 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோடா விகியாம் நகரில் பிரபல தனியார் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு உள்ள விடுதியில் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விகியாம் நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து முத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 16 வயதான இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். நீட் தேர்வுக்காக இங்குள்ள பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கிருந்து படித்து வந்தார். மாணவி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி எழுதிய எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை. மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,’என்றார். தற்போது இறந்த மாணவியை சேர்த்து நடப்பு ஆண்டில் மட்டும் 23 பேர் அந்த பயிற்சி மையத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் 15 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை: ஒரே ஆண்டில் 23 பேர் இறப்பு appeared first on Dinakaran.

Tags : NEET ,center ,Koda, Rajasthan ,Koda ,
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு