×

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதியரசர் சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

புதுகோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்காக கட்டபட்டுள்ள மேல் நிலை குடிநிர் தொட்டியில் மனிதக் கழிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கி சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், திருவள்ளூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில், ஒருநபர் ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி 2 மாதத்தில் அறிக்கை அளிக்கவும் அந்த ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கானது தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலூ அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சத்திய நாராயணன் ஆணையம் அளித்த இடைகால அறிக்கையானது மூடி முத்திரையிடபட்ட உறையில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யபட்டது. அதேபோல் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ள விசாரணையின் அறிக்கையும் தாக்கல் செய்யபட்டுள்ளது.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், 191 சாட்சிகளிடம் விசாரணை நடத்தபட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சந்தேகிக்கபடும் 25 நபர்களின் மரபணு சோதனைகள் நடத்தபட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரிடம் சோதனை நடத்த வேண்டியுள்ளதாகவும், அவை 2 வாரங்களில் நடத்தி முடிக்கபடும் எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதி சத்தியநாராயணன் குழு அளித்த அறிக்கையை பிரித்து ஆய்வு செய்த நீதிபதிகள் காவல்துறையினரின் விசாரணை மந்த நிலையில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகாட்டினார்கள். மேலும் அறிக்கையை பாதுகாப்பாக பத்திரபடுத்தும் படி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கின் புலன் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Vengaivyal village ,CHENNAI ,Venkaiwayal village ,Venkaiwayal ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!