×

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி கயிறு கட்டி உயிருடன் மீட்பு..!!

ஈரோடு: ஈரோடு சூளை பகுதியில் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டியை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் (80) வயதான மூதாட்டி வள்ளியம்மாள். இன்று வழக்கம் போல் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் மூதாட்டி தனியாக இருந்துள்ளார்.

வீட்டினுள் நடை பெயர்ச்சி மேற்கொண்டபோது வீட்டின் உள்பகுதியில் இருக்கக்கூடிய கிணற்றின் பக்கவாட்டு சுவரை பிடித்தபடியே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றினுள் மூதாட்டி தவறி விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக பக்கவாட்டு சுவரில் உள்ள கயிற்றை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்திருக்கின்றார். 50 அடி ஆழம் கொண்ட கிணறு என்பதால் மூதாட்டி கயிற்றை பிடித்துக்கொண்டு மேலே வர இயலாமல் கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து பார்த்த போது தண்ணீரில் தத்தளித்திருந்த அவரை காப்பாற்ற முயற்சித்தனர். முடியாத சூழ்நிலையில் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கயிறுகட்டி உள்ளே இறங்கி மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரில் தத்தளித்த போதும் அவர் உயிருடன் மீட்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி கயிறு கட்டி உயிருடன் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Kiln ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா