
புதுடெல்லி: வட மாநிலங்களில் இந்தி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற மொழிகளின் பன்முக தன்மையை இந்தி மொழி ஒருங்கிணைத்து செல்கிறது. சுதந்திர போராட்டத்தின் கடினமான நாட்களில் மக்களை இணைக்கும் சக்தியாக இந்தி மொழி இருந்து வருகிறது.
நமது நாட்டின் பன்முகத்தன்மையும் கலாசாரத்தையும் வெளிநாட்டில் எடுத்துக்கூறும் விதமாக இந்தி மொழி உள்ளது. அது மற்ற மொழிகளுடன் போட்டியிடவில்லை. அந்த வேலையை ஒருபோதும் இந்தி மொழி செய்யாது. இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் நாடாக இருக்கிறது. அந்த மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி மொழி ஒருங்கிணைத்து செல்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழி.
The post மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி மொழி ஒருங்கிணைத்து செல்கிறது, இந்தி ஒரு ஜனநாயக மொழி: அமித்ஷா appeared first on Dinakaran.