×

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு: 70-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாடல்கள் பங்கேற்பு

நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாடல்கள் பங்கேற்ற ஆடை, அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கனவுகளின் ஓடுபாதை என்ற அறக்கட்டளை நியூயார்க்கில் மாற்று திறனாளிகளுக்கான ஆடை அலங்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர்.

செயற்கை அவயங்களை அணிந்தும், சர்க்கரை நாற்காலிகளில் அமர்ந்த படியும் நவநாகரீக உடைகளுடன் அவர்கள் மேடையில் தோன்றி அசத்தினர். கரஒலி எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர். மாற்று திறனாளிகளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து அவர்கள் மேடையில் நடந்து சென்றனர். சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் நியூயார்க் பேசன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு: 70-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாடல்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Paramedic Fashion Show ,New York ,United States ,Dreams Foundation… ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்