கொடைக்கானல்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென்மேற்கு பருவமழை போதித்து போனதாலும் நோய் தாக்குதல் காரணமாகவும் மானாவாரி எள் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கோம்பை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் எள், வேர்க்கடலை, சூரியகாந்தி, கம்பு, சோளம் போன்ற மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயிகள் மானாவாரி காடுகளை உழுது பயன்படுத்தி எள் விதைத்தனர். அவ்வப்போது பெய்த மிதமான மழையால் எள் செடிகள் முளைக்கத் தொடங்கிய நிலையில் சில நாட்களிலேயே எள் செடிகளை மர்மநோய் தாக்குதலுக்குள்ளாக்கி கருகின. மேலும் கம்பம் பகுதியில் தென் மேற்கு பருவமழை சரிவர இல்லாததால் எள் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
கொடைக்கானல் பூண்டுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு
இதனிடையே கொடைக்கானலில் விளையும் வெள்ளை பூண்டு வடமாநிலங்களுக்கு விதை பூண்டாக செல்வதால் தேவை அதிகரித்திருப்பதாகவும் ஒரு கிலோ மலை பூண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
The post வட மாநிலங்களுக்கு விதை பூண்டாக செல்வதால் தேவை அதிகரிப்பு: ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.300 வரை விற்பனை appeared first on Dinakaran.
