×

காலவாக்கத்தில் அம்மன் கோயில் சேதம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே காலவாக்கம் கிராமத்தில் சித்தேரியை ஒட்டி கன்னியம்மன் கோயில் உள்ளது. கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருங்கற்களை நட்டு கிராம மக்கள் எல்லை தெய்வமாக வழிபட்டு வந்தனர். தங்களின் வீடுகளில் நடத்தப்படும் காதணி விழா, மொட்டையடித்தல், கூழ் ஊற்றுதல் போன்றவற்றை இந்த கோயில் முன்பு செய்து வந்தனர். மேலும், விவசாயப் பணிகள் தொடங்கும்போதும், நிறைவு பெறும்போதும் இந்த கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதும் வழக்கம். இந்நிலையில் நேற்று காலை அவ்வழியே சென்ற காலவாக்கம் கிராம மக்கள் கன்னியம்மன் கோயில் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கிராம வி.ஏ.ஓ. மோகன், மற்றும் திருப்போரூர் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். யாரேனும் மது போதையில் கோயில் என்று தெரியாமல் கற்சிலைகளை உடைத்துப் போட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post காலவாக்கத்தில் அம்மன் கோயில் சேதம் appeared first on Dinakaran.

Tags : Amman Temple ,Kalavakam ,Tiruporur ,Kanniyamman ,Temple ,Chitheri ,Kalavakkam ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை