×

அமெரிக்காவில் இந்திய மாணவி கொல்லப்பட்ட விவகாரம்: கேலி செய்த அமெரிக்க விசாரணை அதிகாரிகள் மீது இந்திய தூதரகம் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி ஜான்வி கந்துலா என்ற இந்திய மாணவி சியாட்டில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ரோந்து வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாணவியின் மரணம் பற்றியும் காவல்துறை அதிகாரிகள் சிலர் கேலி செய்திருக்கின்றனர்.

அமெரிக்க காவல் அதிகாரி டேனியல் என்பவர் மாணவி சாதாரண ஒரு பெண் என்று குறிப்பிட்டதும் அவருக்கு 11,000 டாலர் காசோலை போதுமானது என்று கேலி செய்திருந்ததும் அவரது பாடி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சின்ஹா நிலையில் அமெரிக்க காவல் அதிகாரிகளின் செயல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள சான்பிரான்சிஸிகோவிலுள்ள இந்திய தூதரகம் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

 

The post அமெரிக்காவில் இந்திய மாணவி கொல்லப்பட்ட விவகாரம்: கேலி செய்த அமெரிக்க விசாரணை அதிகாரிகள் மீது இந்திய தூதரகம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : US ,Indian embassy ,Washington ,India ,America ,
× RELATED அமெரிக்க உளவு விமானம் கடலில் மூழ்கியது: 9 வீரர்கள் உயிர் தப்பினர்