×

தேனி மாவட்டத்தில் அவரைக்காய்க்கு கொள்முதல் விலை இருமடங்காக உயர்வு: ஒரு கிலோ அவரைக்காய் விலை ரூ.50-ஆக அதிகரிப்பு

தேனி: ஆண்டிப்பட்டி அருகே மலை கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அவரைக்காய்க்கு கொள்முதல் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மலை கிராமங்களான மூலக்கடை, சிறப்பாறை, மாந்தீசுனை, முத்தாலம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அவை பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்மழை உரிய நேரத்தில் மருந்து தெளித்து பராமரித்ததன் காரணமாக இந்த ஆண்டு அவரை காய் அதிக விளைச்சல் கண்டுள்ளது.

இதனால் வரத்து அதிகரித்ததுடன் அதன் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.25 வரை ஏலம் போன அவரைக்காய் தற்போது இரண்டு மடங்கு விலை அதிகரித்து ரூ.50-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் அவரைக்காய் தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் ஆகிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அவரை சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் இதே விலை நீடித்தால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேனி மாவட்டத்தில் அவரைக்காய்க்கு கொள்முதல் விலை இருமடங்காக உயர்வு: ஒரு கிலோ அவரைக்காய் விலை ரூ.50-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Honey District ,Andipatti ,Theni District ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...