×

கம்பத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்: 2 பெண்கள் உட்பட 31 பேர் கைது

கம்பம், செப். 14: நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி கம்பத்தில் நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள மத்திய அரசு வங்கி முன்பு வந்தடைந்தனர்.அங்கு விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா,கம்பம் வடக்கு எஸ்ஐ இளையராஜா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 31 பேரை கைது செய்து தனியார் திருமண்டபத்தில் தங்க வைத்தனர்.

உத்தமபாளையத்திங் ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தை மாவட்ட செயலாளர் பெருமாள் துவக்கி வைத்தார். இதில் மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் அழகேஸ்வரி,மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்: 2 பெண்கள் உட்பட 31 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gamba ,Kampham ,Hindi ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்;...