×

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

சின்னமனூர், செப். 14: சின்னமனூரில் தமிழக அரசின் பொதுமக்களுக்கான திட்டம் மழைநீர் சேமிப்பு கு றித்து விழிப்புணர்வு பேரணியை உத்தமபாளையம் தி கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சின்னமனூர் காவல் துறையும் இணைந்து நடத்தியது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் சாகுல் ஹமீது, முதல்வர் முகமது சாலிக், துணை முதல்வர் கமலா ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னமனூர் நகர் எஸ்ஐ கோதண்டராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி காந்தி சிலை, தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக நேருஜி பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, முத்தாலம்மன் கோயில் சாலை, செக்காமுக்கு, தேரடி காமராஜர் சிலை அருகில் நிறைவு பெற்றது.

The post மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Rainwater conservation awareness ,Chinnamanur ,Tamil Nadu government ,Uttampalayam ,Rainwater harvesting awareness ,
× RELATED அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்...