×

தனியார் பஸ் மோதி முதியவர் பலி

ஆண்டிபட்டி, செப். 14: தேனி புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவர் ஞானவேல் (85). இவர் நேற்று தேனி காமராஜர் பேருந்து முனையத்தில் நின்றிருந்த போது, போடி செல்வதற்காக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் முதியவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுநரான தேனி சிந்துவம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரனிடம் தேனி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் பஸ் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Gnanavel ,Theni New Bus Stand ,Theni ,Dinakaran ,
× RELATED தண்ணீரை காய்ச்சி குடிங்க