×

நத்தம் ஒன்றிய குழு கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நத்தம், செப். 14: நத்தத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நத்தம் யூனியன் அலுவலக வளாகத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, ஒன்றிய குழு துணைத்தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உதவியாளர் கருப்பணபிள்ளை அறிக்கை வாசித்தார். இதில் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்கள் பதில் தெரிவித்தனர். மேலும் வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நத்தம் ஒன்றிய குழு கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Natham union committee ,Natham ,Nadda ,Natham Union ,Union ,Dinakaran ,
× RELATED பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீரை...