- ஒன்றிய கழக தின கொடியேற்று விழா
- மதுரை
- 37வது அமைப்பு தின கொடியேற்று விழா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மருத்துவ நிர்வாக ஊழியர்கள் சங்கம்
- மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
- அமைப்பு நாள் கொடியேற்று விழா
- தின மலர்
மதுரை, செப்.14: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தின கொடியேற்று விழா நேற்று நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் அமைப்பு தின கொடியேற்றி உரை நிகழ்த்தினார். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க முன்னாள் மாநில பொருளாளர் தங்கவேல், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணை தலைவர் நீதிராஜா வாழ்த்துரை வழங்கினார். இதில் அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்ட தலைவர் பரமசிவன், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாநிலப் பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் சிவகுரும்பன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post சங்க அமைப்பு தின கொடியேற்று விழா appeared first on Dinakaran.