
உடுமலை, செப்.14: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் ஊராட்சி செயலர்களுக்கும் வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் உடுமலை வட்டாரத்தில் ஊராட்சி செயலர்கள் 24 பேர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் உட்பட 43 பேர் பங்கேற்றுள்ளனர். இதேபோல், மடத்துக்குளத்தில் 37 பேரும், குடிமங்கலத்தில் 30 பேரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.