
அவிநாசி, செப்.14: காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 52 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. யாரும் பணிக்கு வராததால் ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.
The post ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.