×

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

காங்கயம், செப்.14: காங்கயத்தில் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காங்கயம் கோவை ரோடு தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நதியா தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில், ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு, சமையல் காஸ் 200 சதவீத விலை உயர்வு, தேர்தல் நெருங்குவதால் காஸ் விலையை குறைத்து கபட நாடகம் நடத்தும் அரசு, உணவுப்பொருட்கள், பால், தயிர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடுமையான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பனியன், பவர்லூம், பஞ்சாலை, இன்ஜினியரிங் உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களும் பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. கொள்கை, மேலும் பல நாசகர நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Union Government ,Gangaim ,Communist Party of India ,Gangayam Coimbatore Road ,Dinakaran ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு