×

ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.14: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது. அவிநாசியை அடுத்த சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் குவிண்டாலுக்கு ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் குவிண்டாலுக்கு ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

The post ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Saveur Regulation Hall ,Dinakaran ,
× RELATED அவிநாசி கூட்டுறவு விற்பனை...