×

ஈரோட்டில் வெவ்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி, தேனீக்கள் கொட்டி இருவர் பலி

ஈரோடு, செப்.14: ஈரோடு கோணவாய்க்கால், சுக்கான் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (63). இவர் ஈரோடு மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தனது வீட்டில் இருந்த கம்பரசர் மெஷின் சுவிட்ச் ஆப் செய்த போது எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியது. பின்னர் உடனடியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, மொடக்குறிச்சி அடுத்துள்ள துரைப்பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் முத்துசாமி(34). திருமணமாகவில்லை. இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். கடந்த 31ம் தேதி ஆலுச்சாம்பாளையத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மரம் வெட்டும் வேலைக்கு முத்துசாமி சென்றுள்ளார். அப்போது மரத்தின் மீது அமர்ந்து மரத்தை அறுத்து கொண்டிருந்த போது மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கூடு கலைந்து முத்துசாமியை தேனீக்கள் கொட்டியது.

வலி தாங்க முடியாமல் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. தேனீக்கள் கொட்டியதால் உடல் முழுவதும் வீங்கிய நிலையில் சிகிச்சை்ககாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் குமாரமங்கலம் அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். இது குறித்து ஈரோடு தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஈரோட்டில் வெவ்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி, தேனீக்கள் கொட்டி இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Shekhar ,Sukhan Estate, ,Konavaikal, Erode ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED பெண் பத்திரிகையாளரை பற்றி...