
ஈரோடு, செப்.14: ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர் வெங்கிடுசாமி லடாக்கில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்திய எல்லை பகுதியான லடாக்கில் 11,155 அடி உயரத்தில் மாரத்தான் போட்டி கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில், 28 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் கடும் குளிரில் 21 கி.மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 45 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஈரோட்டில் இருந்து ஈரோடு மாநகராட்சி பணியாளர் வி.எம்.வெங்கிடுசாமி பங்கேற்று 2 மணி நேரம் 50 நிமிடங்களில் 21 கி.மீட்டர் தூரம் ஓடி பதக்கம் பெற்றார். வெங்கிடுசாமி பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
The post லடாக்கில் நடந்த மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற ஈரோடு மாநகராட்சி ஊழியர் appeared first on Dinakaran.