×

மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திட்ட விவரம் சேகரிப்பாளர் பணிக்கு 20ல் நேர்காணல்

ஈரோடு, செப்.14: மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திட்ட விவரம் சேகரிப்பாளர் பணிக்கு வரும் 20ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.இது குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலமாக ஆறுகளில் நாட்டு இன மீன் குஞ்சுகள், இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் நிலை குறித்து ஆய்வு (Post Impact Assessment for River Ranching Program) மேற்கொள்ள ஒரு திட்ட விவரம் சேகரிப்பாளர் (Enumerator) நேர்காணல் மூலமாக தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் இளங்கலை மீன் வள அறிவியல் பட்டம் (B.F.Sc.,) பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எஸ்.சி, எம்.எஸ்.சி பட்டம் விலங்கியல், கடல் உயிரியல் அல்லது பிற அறிவியல் (Life Science) பாட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதிய கணினி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கான நேர்காணலுக்கு ஈரோடு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 7வது தளம், ஈரோடு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். வரும் போது, கல்விச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வயது நிரூபணச்சான்றிதழ், இதர தொடர்புடைய சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியற்றுடன் வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு வர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0424-2221912 என்ற எண்ணிலும், adferode2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திட்ட விவரம் சேகரிப்பாளர் பணிக்கு 20ல் நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : Assistant Director ,Fishermen Welfare ,Erode ,Fish Resources ,Fishermen's Welfare Department ,Fisheries Welfare ,Dinakaran ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்