×

ஊராட்சி தலைவி, கணவன் கைது வந்தவாசியில் பரபரப்பு அரசு பஸ்சை மடக்கி போராட்டம்

வந்தவாசி, செப்.14: வந்தவாசி அருகே அரசு பஸ்சை மடக்கி போராட்டம் செய்த ஊராட்சி தலைவி, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் ஆரணி வேளாண்ைம பொறியியல் துறை சார்பில் ₹90 ஆயிரத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட மண்ணை கொண்டு குளக்கரையை பலப்படுத்தியும், பள்ளி வளாகம், ரேசன் கடை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சமன் செய்தனர். இந்நிலையில், நேற்று ஊராட்சி மன்ற தலைவி கோமதி(41) ஆரணி வேளாண்மை பொறியியல் துறையினர் குளத்திற்காக தோண்டிய மண்ணை விற்பனை செய்வதாக கூறி கொண்டையாங்கும்பம் கிராமத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை மடக்கி பிடித்து போராட்டம் செய்தார். தகவலறிந்த தெள்ளார் போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சமரசம் செய்தார்.

இருப்பினும், கலெக்டர் வந்தால்தான் பஸ்சை விடுவேன் என கூறினார். தொடர்ந்து, எஸ்ஐ வேளாண்மை பொறியியல் துறை உதவி ெபாறியாளரிடம் ெசல்போனில் பேசினார். அதற்கு அவர்கள் மண் விற்பனை செய்யவில்லை என்று தெரிவித்தார். அப்போது, மனைவி கோமதிக்கு ஆதரவாக அவரது கணவர் சென்னை அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி(47), போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் எச்சரித்தும் செல்லாததால், கோமதி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய 2 பேரையும் தெள்ளார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அரசு பஸ்சை இயக்கவிடாமல் தடுத்தாக இன்ஸ்பெக்டர் ரேகாமதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஊராட்சி தலைவி, கணவன் கைது வந்தவாசியில் பரபரப்பு அரசு பஸ்சை மடக்கி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Vandavasi ,
× RELATED வீட்டில் துப்பாக்கி பதுக்கி விற்பனை...