- பெரியதாலா புனித அந்தோணியார் தேவாலயம்
- சதங்குளம்
- பெரியதலா புனித அந்தோணியார் கோவில் திருவிழா
- பெரியதாலா புனித அந்தோணியார் ஆலயம்
- பெரியதாலா புனித அந்தோணியார் ஆலய திருவிழா
சாத்தான்குளம்,செப்.14: பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 24ம் தேதி வரை 13நாள்கள் நடக்கிறது. முதல் நாள் மாலை 6.30மணிக்கு டி.எம்.எஸ்.எஸ்.எஸ். மீனவ கூட்டமைப்பு தலைவர் பணியாளர் சகேஷ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து மறையுரை நடந்தது. திருவிழா நாளில் ஒவ்வொரு நாளும் காலை 6மணிக்கு திருப்பலியும், மாலை 6மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 12ம் நாளான 23ம் தேதி மாலை 6மணிக்கு மணப்பாடு பங்குதந்தை லெரின்டிரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. நிறைவு நாளான 24ம் தேதி காலை 7மணிக்கு திருவிழா திருப்பலி உவரி பங்குதந்தை ராஜன் தலைமையில் நடககிறது. காலை 9மணிக்கு புனித அந்தோணியார் சப்பரபவனியும் நடக்கிறது. மாலை 6மணிக்கு திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியார் சபை மக்கள், ஊர்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
The post பெரியதாழை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.