
தூத்துக்குடி,செப்.14:நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வக்கீல்கள் கடந்த 8ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11ம் தேதி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மூன்றாவது கட்ட போராட்டமாக தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் மெம்பர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இதில் செயலாளர் மார்க்ஸ் மற்றும் வக்கீல்கள் யுஎஸ் சேகர், அதிசயகுமார், சுரேஷ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
The post நீதிமன்றங்களில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.