விகேபுரம்,செப்.14: விகேபுரம் அருகே மேல ஏர்மாள்புரத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் கோயில் திருவிழா நடந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி கோயிலில் இருந்த உண்டியலை குடத்துடன் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை கோயிலில் பூஜை செய்வதற்காக பொருளாளர் முருகன் வந்துள்ளார். அப்போது கோயிலில் குடத்துடன் இருந்த உண்டியலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(25) என்பவர் குடத்துடன் உண்டியலை எடுத்துச் சென்ற து தெரியவந்தது. இதுகுறித்து ஊர் நாட்டாமை முத்துக்குட்டி மற்றும் பொருளாளர் முருகன் ஆகியோர் விகேபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குடத்துடன் உண்டியலை திருடி சென்ற சுரேஷை இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கைது செய்தார். முதற்கட்டமாக சுரேஷிடம் நடத்திய விசாரணையில், உண்டியல் உள்ள பணத்தை எடுத்து விட்டு குடத்தை அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கிணற்றில் உள்ள குடத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கோயில் உண்டியலை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.
