×

வடகிழக்கு பருவமழை, பேரிடர் கால நிவாரண மையங்களை தயார்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, செப். 14: வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களையும் கால்நடைகளையும் பாதுகாக்க நிவாரண மையங்களை தயார்படுத்த வேண்டும் என, பேரிடர் விழிப்புணர்வு பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் விதமாக மாவட்டங்களில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகள், பேரிடர் நிவாரண மையங்களை தயார் செய்ய வேண்டும். குறிப்பாக மின் வசதி, குடிநீர், கழிவறை, ஜெனரேட்டர், சமையல் செய்யும் வசதி போன்றவற்றை தயார்படுத்த வேண்டும்.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்க வசதி ஏற்படுத்த வேண்டும்.ரேசன் மூலம் வழங்க அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், மளிகை பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். அரசு பேரிடர் தகவல உதவி எண் 1077 குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மூலம் மக்களிடம் அரசு, வானிலை மையம் அறிவிக்கும் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வது, மீட்பு பணியில் ஈடுபடுவது, கால்நடைகளுக்கு பாதுகாப்பு மையம் அமைத்து கொடுப்பது, அவற்றுக்கு தீவனங்களை ஏற்பாடு செய்வது, வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை கண்டறிந்து மக்களை மீட்க, படகு, நீச்சல் வீரர்களை தயார் செய்வது, உரிய மருத்துவ குழுவினர், வெளியிலிருந்து வரும் நிவாரணப்பொருட்களை விநியோகிக்க குழு அமைக்க வேண்டும், தடையில்லா மின்சாரம் வேண்டும். பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும், பால், குடிநீர் தடையில்லாமல் கிடைக்க வேண்டும், அரசு அலுவலர் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் பார்வையாளராக நியமிக்க வேண்டும், கிராமந்தோரும் முன்கள மீட்பாளர் குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

The post வடகிழக்கு பருவமழை, பேரிடர் கால நிவாரண மையங்களை தயார்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Thirutharapoondi ,Northeast ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை குண்டும் குழியுமான...