×

நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

விழுப்புரம், செப். 14: விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயமானது தொடர்பாக மாணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கேகே ரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருக்கோவிலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே நேற்று கல்லூரிக்கு வழக்கம்போல் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்த பிறகும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தான் காதலிப்பதாக ஆசைவார்த்தைகளை கூறி தனது மகளை அழைத்துச் சென்று இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நர்சிங் கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Nursing College ,Viluppuram ,Vilappuram ,Nursing ,College ,Maayam ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக விழுப்புரம்...