×

நீடாமங்கலம் அருகே சதுரங்கவல்லபநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

நீடாமங்கலம், செப். 14: நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோயிலில் வார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post நீடாமங்கலம் அருகே சதுரங்கவல்லபநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chaturangavallabhanathar temple ,Needamangalam ,Bhuvanur Chaturangavallabanathar Temple ,Devarapapadal ,Thirunavukarasar… ,
× RELATED பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும்