×

தஞ்சாவூரிலிருந்து தர்மபுரி, கள்ளக்குறிச்சிக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், செப். 14: தஞ்சாவூரிலிருந்து தர்மபுரி, கள்ளக்குறிச்சிக்கு 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து தர்மபுரிக்கும், கள்ளக்குறிச்சிக்கும் தலா 1000 டன் நெல் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரிலிருந்து தர்மபுரி, கள்ளக்குறிச்சிக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dharmapuri, Kallakurichi ,Dinakaran ,
× RELATED தஞ்சை கீழவாசல் அருகே வீட்டில் வாஷிங்...