- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- சென்னை வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- சென்னை வானிலை நிலையம்
சென்னை: ‘தமிழ்நாட்டில் வெப்ப சலனம் நீடிப்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்யும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில், அதிகபட்சமாக விழுப்புரத்தில் 90 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதற்கிடையே, கரூர், மதுரை விமான நிலையத்தில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக 6க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அதற்கு மேலும் வெப்ப நிலை உணரப்பட்டது.
ஈரோடு, திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உணரப்பட்டது. தஞ்சாவூர், சென்னை, நீலகிரி, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் அதிமாக உணரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உருவான வெப்ப சலனம் காரணமாக 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 55 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகம் வரையில் வீசும். மேலும், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
The post வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
